search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமுக பிரமுகர்கள் மரணம்"

    கருணாநிதிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ள அதிர்ச்சியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் மற்றும் தி.மு.க. பிரமுகர் மாரடைப்பால் இறந்தனர். #KarunanidhiHealth
    கந்தர்வக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே உள்ள கல்லுக்காரன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 80). நாதஸ்வர கலைஞரான இவர், தி.மு.க. கிளைச்செயலாளராகவும் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அதிர்ச்சி அடைந்த கணேசன் மிகுந்த மனவேதனையில் இருந்து வந்தார்.

    நேற்று முன்தினம் இரவு, டி.வி.யில் கருணாநிதி உடல்நிலை பற்றி ஒளிபரப்பான செய்திகளை பார்த்து கொண்டு இருந்த கணேசனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரது உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    மற்றொரு சம்பவம்...

    இதே போல் பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் கிராமம் 7-வது வார்டை சேர்ந்தவர் நல்லுசாமி (60). ஓய்வுபெற்ற ஆசிரியரான இவர் தி.மு.க. தொண்டரும் ஆவார்.

    இவரும் நேற்று முன்தினம் இரவு கருணாநிதிக்கு உடல் நலக்குறைவு பற்றிய செய்தியை டி.வி.யில் பார்த்து கொண்டிருந்தபோது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். மரணமடைந்த 2 பேரின் உடலுக்கும் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.  #KarunanidhiHealth



    தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பாதிப்பு குறித்த தகவல்களால் பிரமுகர்கள் 2 பேர் மாரடைப்பால் மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    கோவை:

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் நரசிங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் சபரி நாதன்(வயது 54).

    தி.மு.க.வை சேர்ந்த இவர் பாப்பான்குளம் 5-வது வார்டு துணை செயலாளராக இருந்து வந்தார். தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவது குறித்து சக தொண்டர்களிடம் கேட்டறிந்தார்.

    இதனால் மனவேதனையில் இருந்த சபரிகிரிநாதனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஊட்டி அருகே பரமூலை கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(55). தி.மு.க. கிளை பிரதிநிதி. கருணாநிதி உடல்நிலை பாதிப்பு குறித்த தகவல்களால் மனவருத்தத்தில் இருந்தார்.

    இந்நிலையில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் இறந்தார்.

    கோவை பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் அம்சகுமார்(65) என்பவர் நேற்று முன்தினம் நள்ளிரவு மாரடைப்பால் இறந்தது குறிப்பிடத்தக்கது.
    ×